விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இலங்கை ரக்பி சம்மேளனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, தற்காலிகமாக குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை ரக்பி சம்மேளனத்திற்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமனம் செய்வதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இது தொடர்பில் தமது செயற்குழுவிற்கு காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என, சம்மேளனத்தின் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment