இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள சூழலில், இன்று தான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment