அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ! ஹரிஸ் எம்பியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ! ஹரிஸ் எம்பியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார்

(நூருல் ஹுதா உமர் & எம்.என்.எம்.அப்ராஸ்)

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் கல்முனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கல்முனை பிரதான வீதியினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சாஹிரா கல்லூரி வீதி சந்தி வரை சென்று (பிரதான வீதி) பின்னர் கல்முனை நகர் நோக்கி சென்ற ஆர்ப்பாட்ட பேரணி கல்முனையில் உள்ள அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸின் அலுவலகம் அமைந்துள்ள வீதியால் பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தவாறு சென்றனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.

பின்னர் கல்முனை நகர் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறுயும், சுலோகங்களை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது பேரணியாக சென்றவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது.

No comments:

Post a Comment