நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டுத்துறை அமைச்சின் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை 04.04.2022 காலை ஏக காலத்தில் அவ்வப் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இந்தப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலளார் ஏ. அப்துல் நாஸர் தெரிவித்தார்.

தலா 2 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொரு விளையாட்டு மைதானமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

காத்தான்குடி பிரதேச செலயாளர் பிரிவில் அல் இக்பால் வித்தியாலய மைதானம், ஏறாவூர் நகர பிரதே செயலாளர் பிரிவில் முஹாஜிரின் கிராம பொது விளையாட்டு மைதானம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானம், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மாநகர் மேற்கு பொது விளையாட்டு மைதானம் ஆகியவையே புனரமைப்பு செய்யப்பட்வுள்ளன.

ஏறாவூர் முஹாஜிரின் கிராம விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா, கிராம அலுவலர் எம்.ஏ.ஜே. அஸ்கான், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம் உட்பட விளையாட்டு கழக உறுப்பினர்களும் இன்னும் சில அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment