ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட தடை விதித்து அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பிரதான வீதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், புகையிரத பாதைகள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அல்லது பொலிஸ் தலைமையதிபதியினால் அல்லது இவர்களினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வழங்கப்பட்ட எழுத்து மூலமான அனுமதியின்றி, 2022, ஏப்ரல் 02 ஆம் திகதி 18.00 மணி தொடக்கம் 2022, ஏப்ரல் 04 ஆம் திகதி 06.00 மணி வரை அத்தகைய இடப்பரப்பில் இருத்தலாகாதென பணிப்பதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின்கீழ் தனக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, குறித்த உத்தரவை விடுப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள ஈதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கையில் ஏப்ரல் 02ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை, பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment