இரத்த ஆறு ஓட இருந்த நாட்டை பாதுகாத்தவர் கர்தினால் : நந்தசேன ராஜபக்ஷதான் கொலைகாரர் - சத்தாரத்னா தேரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

இரத்த ஆறு ஓட இருந்த நாட்டை பாதுகாத்தவர் கர்தினால் : நந்தசேன ராஜபக்ஷதான் கொலைகாரர் - சத்தாரத்னா தேரர்

ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் கட்­டாயம் தண்­டிக்­கப்­பட வேண்டும். மனித உயிர்­க­ளுடன் விளை­யாட முயல வேண்டாம். இங்கு கத்­தோ­லிக்க பக்­தர்கள் பௌத்த, முஸ்லிம் சம­யத்­த­வர்கள் ஒன்­று­கூடி உள்­ள­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என அநு­ரா­த­புரம் ராஜாங்­கன சத்­தா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் 3 வது வருட நினைவை முன்­னிட்டு இடம்­பெற்ற மாபெரும் ஆர்ப்­பாட்டம் பேர­ணியின் பின்னர் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பொதுக்கூட்­டத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

கட்­டு­வ­பிட்­டிய சாந்த செபஸ்­தியன் தேவஸ்­தா­னத்தில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட. ஆர்ப்­பாட்டம் பேரணி கட்­டு­வ­பிட்டி வீதி, கொழும்பு வீதி, பிர­தான வீதி, கிறீன்ஸ் வீதி ஊடாக கூட்ட மேடையை வந்­த­டைந்­தது. சர்வ மதத் தலை­வர்­களும் கலந்­து­கொண்ட இக்­கண்­டனக் கூட்­டத்தில் அநு­ரா­த­புரம் ராஜாங்­கன சத்­தா­ரத்ன தேரர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இரத்த ஆறு ஓட இருந்த இந்த நாட்டை பாது­காத்­தவர் எனக்கு முன்­னா­லுள்ள கர்­தி­னா­லாகும். அவர் இல்­லா­விட்டால் இந்த நாடு இரத்தக் கள­றி­யாக மாறி­யி­ருக்கும். மோச­மான அர­சி­யல்­வா­தி­களும், ஞான­சார தேரர், டான் பிரசாத் போன்­ற­வர்கள் கர்­தி­னா­லுக்கு பல்­வேறு அவப்­பெ­யர்­களைச் சொல்லி அழைத்­தார்கள்.

மனதைத் தட்டிக் கேளுங்கள். இங்கே ஏந்­தி­யுள்ள புகைப்­ப­டங்­களில் உள்­ள­வர்கள் உங்கள் அம்மா, அப்பா, சகோ­த­ரர்­க­ளாக இருந்தால் நீங்கள் எடுக்கும் தீர்­மானம் என்ன என்­பதை கேட்க விரும்­பு­கிறேன்.

கர்­தினால் மற்றும் கத்­தோ­லிக்க சபை இந்த தேசத்தில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தார்கள். அதனால் நந்­த­சேன ராஜ­பக்­ச­வுக்குச் சொல்­கிறேன் நீங்­கள்தான் இதன் கொலை­காரன். நீங்கள் எல்­லோரும் இதற்கு பொறுப்புக் கூற­ வேண்டும். அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­ கொள்ள இவ்­வாறு மனி­தர்­களை கொலை செய்­வது உகந்­ததா?

என்­னிடம் இன, மத, குல, கட்சி, நிற பேத­மில்லை. எவ­ருக்கு அசா­தா­ரணம் நடக்­கின்­றதோ அவர்கள் சார்­பாக நான் முன்­நிற்பேன். உங்கள் முன் நிற்க இன்று சந்­தர்ப்பம் கிடைத்­தது.

நீங்கள் எடுத்துச் செல்லும் போராட்­டத்தைப் போல் காலி முகத்­தி­டலில் இளைஞர், யுவ­திகள் போரா­டு­கின்­றனர். அவர்­களை சிறையில் அடைக்க முயற்­சி­கின்­றனர். கத்­தோ­லிக்க பிதாக்­களை சிஐடி க்கு அழைக்­கின்­றனர். இது பௌத்­தர்­க­ளா­கிய எமக்கு வெட்­க­மாகும்.

மகா­நா­யக்க தேரர்கள் தமது பத­வி­களை இள வய­தி­ன­ருக்கு வழங்க வேண்டும். தேசிய ஒற்­றுமை முக்­கி­ய­மாகும். நந்­த­சேன ராஜ­பக்­ச­வுக்கு புண்­ணியம் கிடைக்க சிங்­கள, தமிழ், முஸ்லிம் அனை­வர்­களும் ஒன்­றாக செயல்­ப­டு­கின்­றனர்.

இவர்­களை போகச் சொன்னால் போவ­தில்லை. வீட்­டிற்குப் போனால் இவர்­க­ளுக்கு தண்­டனை கிடைக்கும் என்று தெரியும். உங்கள் அனை­வர்­க­ளுக்கு நியாயம் கிடைக்கும் வரையும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை கிடைக்கும் வரை என்னால் முடிந்த உத­வி­களை செய்வேன். உங்­க­ளு­ட­னேயே இருப்பேன். உங்­க­ளுக்கு வெற்­றி­கி­டைக்க பிரார்­திக்­கிறேன் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment