உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல : பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது என்கிறார் கர்தினால் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல : பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது என்கிறார் கர்தினால்

சாதா­ரண முஸ்லிம் இளை­ஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதா­வது செய்வோம் என நினைத்துச் செய்­த­தல்ல இந்தக் குண்டுத் தாக்­குதல். சிறந்த ஒருங்­கி­ணைப்­புடன் ஆறு இடங்­களில் மனிதப் படு­கொ­லைகள் நடந்­துள்­ளன. இதற்குப் பின்னால் முஸ்லிம் இளை­ஞர்கள் மாத்­தி­ர­மல்ல அதற்கும் மேலால் சிக்­க­லான மறை­கரம் இருப்­பது எனக்கு புரிந்­தது என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தெரி­வித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் 3 வது வருட நினைவை முன்­னிட்டு இடம்­பெற்ற மாபெரும் ஆர்ப்­பாட்டம் பேர­ணியின் பின்னர் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பொதுக்கூட்­டத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

கட்­டு­வ­பிட்­டிய சாந்த செபஸ்­தியன் தேவஸ்­தா­னத்தில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட. ஆர்ப்­பாட்டம் பேரணி கட்­டு­வ­பிட்டி வீதி, கொழும்பு வீதி, பிர­தான வீதி, கிறீன்ஸ் வீதி ஊடாக கூட்ட மேடையை வந்­த­டைந்­தது. சர்வ மதத் தலை­வர்­களும் கலந்­து­கொண்ட இக்­கண்­டனக் கூட்­டத்தில் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

எனக்குப் பின்னால் புகைப்­ப­டங்­களை ஏந்­தி­யுள்­ள­வர்­களைப் பார்த்தேன். அதில் உள்­ளவை மிரு­கங்­க­ளல்ல. மனி­தர்­களே. அவர்கள் யாருக்கு அன்பு செலுத்­தி­னார்­களோ யாரு­டைய வாழ்க்­கையை கட்­டி­யெ­ழுப்­பி­னார்­களோ அவர்கள் இன்று தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இது கவ­லை­ய­ளிக்­கக்­கூ­டிய அனு­பவம். 

இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் வனங்­கு­வ­தற்­கா­கவும், பிராத்­திப்­ப­தற்­கா­கவும் ஈஸ்டர் ஆரா­த­னையில் கலந்­து­கொள்­வ­தற்கும் தேவஸ்­தா­னத்­திற்கும் சிலர் ஈஸ்டர் உணவு அருந்­து­வ­தற்­காக ஹோட்­டல்­க­ளுக்கும் சென்­ற­வர்கள். சக­ல­ரி­னதும் உயிர்கள் ஒரு நிமி­டத்தில் நாச­மாக்­கப்­பட்­டன.

எனக்கு புரிந்­தது இதில் ஒரு நாச வேலை இருப்­ப­தாக. ஒரே நேரத்தில் ஆறு இடங்­களில் (அது ஏழாக திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது) வெடிப்பு சம்­பவம் நடந்­தன.

முன்னாள் சட்­ட­மா ­அ­திபர் தம்­புல டி லிவேரா கூறி­யது போல், அந்த சூழ்ச்சி இவர்­களை பயன்­ப­டுத்தி செய்த படு­கொ­லையே. இது தொடர்­பாக சரி­யான விசா­ரணை நடாத்த இடம்­கொ­டுக்­காமல் அனைத்தும் கீழே போடப்­பட்­டன.

விசா­ரணை உரிய முறையில் நடை­பெற்­றி­ருந்தால் இதன் பின்னால் இருந்­த­வர்கள் யார் என்­பது தெரி­ய­வந்­தி­ருக்கும். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விற்கு சிலர் முட்­டுக்­கட்டை போட்­டனர். விசா­ரணை நடக்கும் போது சாட்­சிகள் வெளிப்­ப­டும்­போது அவர்­களை அந்த இடத்­தி­லி­ருந்து அழைத்துச் சென்­றனர். பல்­வேறு நிபந்­த­னை­களை விதித்­தனர்.

அதனால் உண்­மைகள் வெளி­வ­ர­வில்லை. அவர்கள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே கூறி­ வந்­தார்கள். அந்தப் பிரி­வி­னரே இதற்கும் பின்னால் இருந்­தார்கள். அதற்கு மேல் ஒன்­று­மில்லை என்­றார்கள். அதற்கு எதி­ராக இருந்த சகல சாட்­சி­யங்­க­ளையும் இவர்கள் அழிக்க முற்­பட்­டார்கள்.

இது தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரிவுக்குழுவின் அறிக்­கையின் சுருக்­கத்தை பார்த்தால் இது ஒரு சதித்திட்­டத்தின் ஊடாக நடந்­தி­ருக்கும் தாக்­குதல் என்­பதைப் புரி­யலாம். 

இதனை இந்த நாட்டை ஆட்சி செய்­ப­வர்­களும் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் அதனை வாசிப்­ப­தில்லை. ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி அந்தக் குழுவின் மேல் சுமத்தி கையைக் கழு­விக்­ கொள்ள எத்­த­னிக்­கி­றார்கள்.

269 மர­ணங்­க­ளுக்கும் சிந்­திய இரத்­தத்­திற்கும் பலம்­ வாய்ந்­த­வர்கள் பொறுப்­புக்­கூற வேண்டும்.

நீர்­கொ­ழும்பில் இன்று முழு நாட்­டிற்கும் உரத்த குரலில் சொல்­வது இந்த ஊழல், மோசடி முறையை மாற்­றுவோம் என்­ப­தையே.

சட்டம் ஜனா­தி­ப­தியின் கீழ் உள்­ளது. ஜனா­தி­ப­திக்கு சட்­ட­மி­யற்ற இயலும். சட்டமா அ­திபர் ஜனா­தி­ப­திக்கு கீழ்ப்­ப­டி­பவர். அவர் சொல்­வ­தையே சட்டமா அ­திபர் செய்­கிறார்.

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் ஏராளம் இருக்கும் போது தெரிவு செய்­யப்­பட்ட சிலதை மாத்­திரம் நடை­மு­றைப்­ப­டுத்த முயற்சி எடுத்­தனர். அதற்­காக 6 அமைச்­சர்­களைக் கொண்ட குழுவை நிய­மித்­தனர். 

இந்த சந்­தர்ப்­பத்­தில்தான் இதற்கு மேல் அவர்­க­ளுடன் வேலை செய்­ய ­மு­டி­யாது என்­பதை நாம் அறிந்­து­கொண்டோம். அவர்­க­ளுக்கு சார்­பா­னதை மட்டும் அமுல்­ப­டுத்த முயற்சி எடுத்­தனர். இதற்குப் பின்னால் சதி இருப்­பதை இதன் மூலம் தெரிந்­து­கொண்டோம்.

இந்த இலங்­கையில் ஊழல் மோசடி வளர்ந்து எமக்கு வாழ முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எல்லா இடங்­க­ளிலும் வரி­சைகள். மக்­களின் தேவைகள், வயிற்­றுப்­பசி தொடர்­பாக அக்­கறை இல்­லையா? இவர்­களின் தொழி­லுக்கு அடி­வி­ழுந்தால் எப்­படி வாழ்­வது? இன்று எத்­தனை குடும்பம் பசியால் வாடு­கின்­றனர். அவர்­களின் பசியை அர­சி­யல்­வா­திகள் உணர்­வ­தில்­லையா?.

இன்று நாம் நீர்­கொ­ழும்பில் நடத்தும் ஆர்ப்­பாட்டம் இலங்கை முழு­வ­திலும் ஏற்­பட்­டுள்­ளதில் ஒரு பகு­தி­யாகும். நாம் காலி ­மு­கத்­திடல் இளைஞர், யுவ­தி­க­ளுடன் ஒன்­றி­ணைவோம். இலங்கை எதிர்­பார்க்­கின்ற துறை­சார்ந்த ஒரு குழு­வி­னரே அதனைச் செய்­கின்­றனர். அப்­படி அந்த இளைஞர், யுவ­திகள் சிந்­திப்­ப­தாயின் எமது நாடு பாது­காப்­பா­னது. அதனை யாரும் மட்­டம்­தட்ட முடி­யாது. இது ஒரு சம­யத்­திற்கோ, ஒரு இனத்­திற்கோ, ஒரு மொழிக்கோ மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தல்ல. நாம் இலங்­கை­யர்கள். இந்த அழ­கிய நாட்டின் பிர­ஜைகள்.

நாம் எல்­லோரும் ஒன்று சேர்ந்து நடத்தும் இப்­போ­ராட்டம் நியாயம், சாதா­ரணம் மட்­டு­மன்றி முழு நாட்­டையும் மீட்கும் போராட்­ட­மாகும்.

1948 இல் சுதந்­திரம் கிடைத்­தாலும் 74 வரு­டங்­க­ளாக ஆட்சி செய்­த­வர்கள் நாட்டை காட்­டிக்­ கொ­டுத்­தார்கள். நாட்டை நாச­மான நிலைக்கு கொண்டு சென்­றார்கள்.

இது அர­சுக்கு எதி­ராகச் செய்யும் போராட்டம் என்­பதை விட முழு நாடும் மீண்டும் சுதந்­தி­ர­ம­டைந்து ஊழல் மோச­டி­யி­லி­ருந்து வெளி­வ­ரு­வ­தற்­கான போராட்­ட­மா­கவே நான் காண்­கிறேன்.

நான் இன்று இரவு றோம் தேசத்­திற்குச் செல்­கிறேன். தனி­மையில் செல்­ல­வில்லை. கட்­டு­வ­பிட்­டிய சாந்த செபஸ்­தியன் தேவஸ்­தானம், கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியர் தேவஸ்­தானம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவஸ்­தானம் ஆகிய இடங்­களில் நடாத்­தப்­பட்ட ஈஸ்டர் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட, பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பிர­தி­நி­திகள் 35 பேரை அழைத்துச் செல்­கிறேன். பாப்­ப­ர­சரின் அழைப்பின் பேரி­லேயே இவர்­களை அழைத்துச் சொல்­கிறேன். 

பாப்­ப­ர­சரை நான் சந்­தித்த போது ஈஸ்டர் தாக்­கு­தலின் தற்­போ­தைய நிலை­மையை கேட்­ட­றிந்தார். இலங்கை அர­சாங்­கத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்­கா­விட்டால் இதனை சர்­வ­தே­சத்­திற்கு எடுத்துச் செய்வோம் என எனக்கு கூறினார். அதற்­கி­ணங்­கவே இவர்­களை அழைத்துச் செல்­கிறேன்.

எவரும் அர­சி­யலை பாவித்து இன, மதவாதத்தை தூண்ட இட­ம­ளிக்­காமல் சகோ­த­ரத்­து­வத்­துடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப ஒன்­று­ப­டுவோம். முழு நாட்டின் நலனைப் பற்­றியே சிந்­திப்போம்.

சிறு, சிறு குற்­றங்­க­ளுக்­காக கூடு­த­லா­ன­வர்கள் சிறை­களில் உள்­ளனர். ஆனால் பெரிய, பெரிய நபர்கள் செய்­த­வற்றைப் பார்த்தால் அவர்கள் எப்­படி மாட மாளி­கை­களில் வாழ்­வது? இது எமக்கு கேள்­விக்­கு­றியே.

கிலோ­ மீட்டர் கணக்கில் நடந்து வந்து இந்த பாரிய ஆர்ப்­பாட்ட பேர­ணியில் கலந்­து­கொண்ட உங்கள் அனை­வர்­க­ளுக்கும் எனது நன்­றிகள். எமக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்­டத்தை நாம் கைவி­ட­மாட்டோம். 

இந்தக் கொலை­களை செய்­த­வர்கள் யார் என்­ப­தை­யா­வது குறைந்­த­பட்சம் தெரிந்­து­கொள்ள வேண்டும். எமக்கு மன்­னிப்பு வழங்க முடியும். அது பிரச்­சி­னை­யல்ல. ஆனால் நேர்­மை­யாக குற்­றத்தை ஏற்­றுக் ­கொள்ள வேண்டும். குற்­றப்­ப­ரி­காரம் பெற குறித்த நபர் மன்­னிப்புக் கோர வேண்டும் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment