வீட்டிலிருந்து சேவையாற்றுங்கள் : ஆலோசனை வழங்கியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

வீட்டிலிருந்து சேவையாற்றுங்கள் : ஆலோசனை வழங்கியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டு மக்கள் கடினமான காலப்பகுதியில் பொறுமையுடனும், ஒத்துழைப்புடனும் செயற்பட்டதால் சவால்களை வெற்றிக் கொள்ள முடிந்தது. 30 வருட கால யுத்தம்,கொவிட் பெருந்தொற்று ஆகியவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றி கொள்ள தாய் நாட்டிற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் வீட்டில் இருந்து சேவையாற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தப்பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாடு முன்னொருபோதும் எதிர்கொள்ளாத சவால் நிலையினை தற்போது எதிர்கொண்டுள்ள வேளையில் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை வீட்டில் இருந்து சேவையாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அந்த அதிகாரிகள் தங்களின் கடமைகளை இயலுமான வரை வினைத்திறனாக செயற்படுவார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை அரசாங்கம் உணர்வுபூர்வமாக அறிந்துள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

கடினமான காலப்பகுதியில் மக்கள் பொறுமையுடனும், ஒத்துழைப்புடன் செயற்பட்டதால் 30 வருட கால யுத்தத்தையும், கொவிட் பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தையும் வெற்றி கொள்ள முடிந்தது. தற்போதைய சவால்களை வெற்றி கொள்ளவும் தாய் நாட்டிற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

No comments:

Post a Comment