மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு

இன்று (01) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02) காலை 6.00 மணி வரையான, 6 மணித்தியாலங்களுக்கு, மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SDIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டத்திற்கு அமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகள் இன்றி நடமாடுதல் தவிர்க்கப்படுவதோடு சுகாதார சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடைகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் அங்கிருந்து திரும்பும் பயணிகள் தங்களது பயணத்தை உறுதிப்படுத்தும் விமான பயணச்சீட்டு அல்லது அது தொடர்பான சான்றுகளை முன்வைத்து விமான நிலைய போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் (31) ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பின் பல பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் இரவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment