காபந்து அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் : மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காவிடின் விளைவுகளை எவராலும் தடுக்க முடியாது - விமல் வீரவன்ச - News View

About Us

Add+Banner

Friday, April 1, 2022

demo-image

காபந்து அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் : மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காவிடின் விளைவுகளை எவராலும் தடுக்க முடியாது - விமல் வீரவன்ச

newswimal_b
(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக குறைவடைந்துள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி அமைச்சரவையினை கலைத்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் காபந்து அரசாங்கம் (இடைக்கால அரசாங்கம்) ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் மக்களின் போராட்டம் எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் போது அரசாங்கத்திடம் தொடர்ந்து எடுத்துரைத்தோம். எமது கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை தற்போது அனுபவிக்கிறது.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களாணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்படவில்லை. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பில் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளோம்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது. தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தும் பொருளாதார நிலையில் நாடு இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி பயனற்ற அமைச்சரவையினை விரைவாக கலைத்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அதாவது இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கம் மாத்திரமல்ல முழு நாடும் அழிவை நோக்கி செல்ல வேண்டும். மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் தோற்றம் பெறும் விளைவுகளை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *