எழுச்சி பேரணியாக மாறிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

எழுச்சி பேரணியாக மாறிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பேரணியாக மாறியது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் இன்றையதினம் (04) காலை ஜனாதிபதியை வெளியேற கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் பல மாணவர்களின் பங்கெடுப்போடு, பல்கலைக்கழகத்திலிருந்து யாழ். நகர் நோக்கி பேரணியாக சென்றது.

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி பலாலி வீதியூடாக பருத்தித்துறை வீதியினை அடைந்து, அங்கிருந்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
பேருந்து நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து, கஸ்தூரியார் வீதியூடாக , ஸ்ரான்லி வீதியை அடைந்து அங்கிருந்து ஆரியகுள சந்தியை அடைந்து, மீண்டும் பலாலி வீதியூடாக மாணவர்கள் பேரணி பல்கலைக்கழகத்தை அடைந்தது.

அதேவேளை மாணவர்கள் பேரணியாக ஸ்ரான்லி வீதியூடாக செல்லும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் முன்பு சில நிமிடங்கள் தரித்து நின்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment