ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ பொருளாதார பிரச்சினைக்கு தீ்வு காண முடியாது - பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ பொருளாதார பிரச்சினைக்கு தீ்வு காண முடியாது - பிரசன்ன ரணதுங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீ்வு காண முடியாது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார மேலும் பாதாலத்துக்கே செல்லும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்காக அவர் விடுத்திருந்த கோரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் சமூக பிரச்சினைகளுக்கு தலைமைத்துவம் வழங்கும் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்வது, நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் பொறுப்பு இந்த நாட்டு இளைஞர்களிலே இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

எமது நாடு எதிர்கொண்டுள்ள பாெருளாதார சமூக பிரச்சினைக்கு ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு ஊடாக செயற்படுவதன் மூலமே தீர்வுகாண முடியும். நாட்டின் புத்திஜீவிகளின் நிலைப்பாடும் அதுவாகும்.

நாட்டின் அரசாங்கமொன்றை வீழ்த்துவதாக இருந்தால், அது அரசியல் அமைப்பு ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும். அதற்காக எம்மனைவருக்கும் உரிமை இருக்கின்றது.

என்றாலும் ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார மேலும் பாதாலத்துகே செல்லும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் மக்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதால், நாடு அதல பாதாலத்துக்கே செல்கின்றது. பொருளாதாரப் பிரச்சினை மேலும் அதிகரித்துச் செல்லும். அதனால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம். அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment