தனி நபரான சுமந்திரன் எவ்வாறு ரெலோவை வெளியேறுமாறு கூற முடியும் - சித்தார்த்தன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

தனி நபரான சுமந்திரன் எவ்வாறு ரெலோவை வெளியேறுமாறு கூற முடியும் - சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனி நபர் சுமந்திரன் எவ்வாறு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவை வெளியேறுமாறு கூற முடியுமென புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பினார்.

நேற்று (04) கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ரெலோ அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக விளங்குகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனி நபராக இருக்கின்ற சுமந்திரன் ஒரு கட்சியை வெளியேறுமாறு கூறுவதற்கு அருகதை அற்றவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலர் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தினால் தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதாக அமையும்.

சுமந்திரனின் கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தனி நபர் ஒருவருடைய கருத்தாகவே பார்க்க முடியும்.

ஆகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை பங்காளி கட்சிகள் விரைவில் சந்தித்து எமது கண்டனத்தை தெரிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் நிருபர்

No comments:

Post a Comment