எமது படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை - விளக்கமளித்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 2, 2022

எமது படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை - விளக்கமளித்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இந்தியா தனது படை வீரர்களை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்தியா தனது படைவீரர்களை இலங்கைக்கு அனுப்புவதாக சில இணைய ஊடகங்களில் வெளியாகும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கிறது.

உயர் ஸ்தானிகராலயம் இத்தகைய பொறுப்பற்ற அறிக்கையிடலைக் கண்டிப்பதோடு, இவ்வாறானவர்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொதுமக்களால் சுயமாக தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக நாட்டில் அவசரகால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இணையத்தள ஊடகமொன்றில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.' என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment