ஹொங்கொங் பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி பதவியை இரண்டாவது முறையாக வகிக்கப் போவதில்லை என்று கேரி லாம் தெரிவித்துள்ளார்.
சீன சட்டங்கள் பலவற்றின் அமுலாக்க நடைமுறையின்போது பிராந்திய தலைமை நிர்வாகியாக,மக்களின் கொந்தளிப்பான காலகட்டங்களை ஓராண்டுக்கும் மேலாக கேரி லாம் எதிர்கொண்டார்.
64 வயதாகும் கேரி லாம், 2017 இல் பிராந்திய தலைமை நிர்வாகி பொறுப்புக்கு சீன மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
"எனது கருத்தில் குடும்பம் எனது முதல் முன்னுரிமை என்று நான் அனைவருக்கும் முன்பே கூறியுள்ளேன். நான் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறினார்.
ஹொங்கொங்கின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜான் லீ, கேரி லாமுக்கு மாற்றாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment