மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனங்களுடனும் கலன்களுடனும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.00 மணி தொடக்கம் காத்திருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லை. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறு கட்டி மூடியுள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் பெறுவதற்கும் வீடுகளில் விளக்கு மற்றும் அடுப்பு எரிப்பதற்காக மண்ணெண்ணையை பெறுவதற்காக கலன்களுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் காத்துக்கிடக்கின்றனர்.
No comments:
Post a Comment