இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை : நம்பிக்கையில்லாப் பிரேணையின் போது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவோம் - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை : நம்பிக்கையில்லாப் பிரேணையின் போது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவோம் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை. புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எதிர்வரும் வாரம் கட்சி ரீதியில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது என்ற தர்க்கம் காணப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்திய தரப்பினர் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துவது வேடிக்கையாகவுள்ளது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய வேண்டிய தேவை கிடையாது.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை

.புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் வாரம் உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ள தயாராகவுள்ளோம். பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை பலம் உள்ளது. எதிர்த்தரப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேணை கொண்டு வரும் வேளை பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment