பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. அந்த வகையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை - கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை கட்டுப்படுத்துவற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment