நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் காரணமாக, அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத் தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புது வருடத்தை முன்னிறுத்தி இவ்வாறு ஒத்திவைக்க முடியுமென அரச உயர் மட்டத்தில் உள்ள சிலர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
தங்களது பெரும்பான்மையை சபாநாயகருக்கு எழுத்து மூலம் காட்டி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைகொண்டுவருவதற்கு இந்த புரட்சிகர குழு எதிர்பார்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment