அரசியல் நாகரீகம் தெரியாத ஒருவரே சாணக்கியன் என்கிறார் முஷாரப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

அரசியல் நாகரீகம் தெரியாத ஒருவரே சாணக்கியன் என்கிறார் முஷாரப்

அரசியல் நாகரீகம் என்னவென்றே தெரியாதவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன். பாராளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களை, கட்சித் தலைவர்களை, முன்னாள் அமைச்சர்களை ஒருமையிலும் தரக்குறைவான வார்த்தைகளாலும் விளித்து உரையாற்றும் அவரைப்பார்த்து பிறர் நகைப்பது அவருக்கு தெரியாது. அத்தகைய ஒருவரிடம் நான் பண்பை எதிர்பார்க்க முடியாது. எனவே அவர் செய்கின்ற செயலுக்காக நான் கவலைப்படுவது அர்த்தமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தார். 

நேற்று பாராளுமன்றத்தில் முஷாரம் எம்பி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது 5000 ரூபா பணத்தாளை காண்பித்து சாணக்கியன் எம்பி குறுக்கீடு செய்தமை தொடர்பில் வினவியபதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் பலரும் மிகவும் கஷ்ட நிலையில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் டயஸ்போரா அமைப்புகள் மூலமாக அனுப்புகின்ற பணத்தில் ஒரு சதத்தையேனும் இவர் அவர்களுக்காக செலவழிப்பதில்லை. 

எனவே எனக்கு 5000 ரூபா தாளை காட்டுவதை விடுத்து டயஸ்போரா ஆட்களுடன் இந்த பணத்தை பாவப்பட்ட கஷ்டப்படுகின்ற தமிழ் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

பேஸ்புக்கிலும் தனது டுவிட்டர் பக்கத்திலும் தனக்கு தெரிந்த தமிழ் ஊடகங்களிலும் சில தமிழ் இணைய தளங்களிலும் செய்திகளையும் படங்களையும் போடுவதற்காக இவர் நடத்திவரும் நாடகங்கள், வேஷங்கள் மக்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 

இவர் இன்னமும் கிணற்றுத்தவளை போலவே இருக்கிறார். எனவே இவர் மற்றவர்களை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு தன்னைப் பார்த்து மக்கள் சிரிப்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தார்.

No comments:

Post a Comment