(எம்.மனோசித்ரா)
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40000 மெட்ரிக் தொன் டீசலுடன் பிரிதொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இன்று 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருளை வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இட்டுள்ள பதிவில், 'இந்தியாவிலிருந்து 500 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இலங்கை வந்தடைந்த 40,000 மெட்ரிக் தொன் டீசலை கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இன்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் கையளித்துள்ளார்.
இந்த நிதியுதவியின் கீழ் வழங்கப்படும் நான்காவது எரிபொருள் இதுவாகும். கடந்த 50 நாட்களில் இலங்கை மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு சுமார் 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment