கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் - கலாநிதி சரித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் - கலாநிதி சரித ஹேரத்

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹாம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் கொத்து ரொட்டியை ஒத்ததாக மாற்றுவதற்கு இலங்கை செயற்பட முடியும் என்று அவர் கூறினார்.

கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கலாநிதி ஹேரத், தற்போது அதில் ஐஸ்கிரீம் கொத்து உட்பட பல வகைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் என்றார்.

இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என கலாநிதி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment