உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக, பூனைகளுக்கான சர்வதேச சம்மேளனம் ரஷ்ய பூனைகளுக்கு தடை விதித்துள்ளது.
இதன்படி ரஷ்யாவில் வளர்க்கப்படும் பூனைகளை இறக்குமதி செய்வது மற்றும் ரஷ்யாவுக்கு வெளியில் நடைபெறும் பூனை கண்காட்சிகளில் பயன்படுத்துவதற்கு மார்ச் 1 ஆம் திகதி அமுவுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்படுவதாக அந்த அரச சார்பற்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு மே மாதம் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என்றும் தேவை ஏற்படுபோது மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று ரஷ்ய தாக்குதலால் துன்பத்தை அனுபவித்து வரும் உக்ரைன் பூனை வளர்ப்பாளர்களுக்கு உதவ நிதி ஒதுக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.
No comments:
Post a Comment