ஆப்கானிஸ்தானில் உலக வங்கி நிதிகள் இடை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

ஆப்கானிஸ்தானில் உலக வங்கி நிதிகள் இடை நிறுத்தம்

இடைநிலை பாடசாலைகளுக்கு பெண்கள் திரும்புவதற்கு தலிபான்கள் தடை விதித்ததை அடுத்து ஆப்கானிஸ்தானில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு திட்டங்களை உலக வங்கி இடை நிறுத்தியுள்ளது.

நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவது உட்பட நான்கு திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

தமது உதவிகளில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் நாம் அவதானம் செலுத்தி உள்ளோம் என்று உலக வங்கி முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

பல மாதங்கள் நீடித்த கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெண்கள் பாடசாலைக்கு திரும்ப அனுமதி அளித்த தலிபான்கள் அந்த முடிவை கடந்த வாரம் திரும்பப் பெற்றனர்.

ஷரியா சட்டம் மற்றும் ஆப்கான் பாரம்பரியத்துக்கு அமைய மாணவிகளின் சீருடையை தயாரிப்பது பற்றி முடிவு ஒன்று எடுக்கப்பட்ட பின் மாத்திரமே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தலிபான்கள் குறிப்பிட்டனர்.

தலிபான்களின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டம் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment