நாளை இரு கட்டங்களில் மின் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 6, 2022

நாளை இரு கட்டங்களில் மின் வெட்டு

நாளையதினம் (07) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

E,F இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 7 1⁄2 மணித்தியாலங்களும்

மு.ப. 8.00 முதல் பி.ப. 6.00 மணி வரை 5 மணி நேரம்
மாலை 6.00 முதல் இரவு 11.00 மணி வரை 2 ½ மணி நேரம்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்களும்

மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்
பி.ப. 5.00 முதல் இரவு 9.00 வரை ஒரு மணி நேரம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் உறுதியளித்தபடி நேற்று (05) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது அல்லது குறைவாக இருக்குமென, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment