ரஷ்யாவின் மத்திய இராணுவ மாவட்டத்தின் 41 ஆவது ஒருங்கிணைந்த ஆயுத படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி, உக்ரைனுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ளார்.
உக்ரைனின் கீவ் நகரின் வீதிகளில் கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது.
மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி, தலைநகர் கீவ்வுக்கு வெளியே சுமார் 30 மைல் தொலைவில் ஹோஸ்டோமல் ஏர்ஃபீல்டுக்கான போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுகோவெட்ஸ்கியின் மரணம் ரஷ்ய படையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுகோவெட்ஸ்கியின் மரணம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் அது சமூக ஊடகங்களில் அவரது சக ஊழியர் செர்ஜி சிபிலியோவ் மூலம் வெளியிடப்பட்ட்ட நிலையில், ரஷ்ய மற்றும் உக்ரேனிய செய்தி நிறுவனங்களால் செய்தி வெளியாகியுள்ளது.
இதுவரை நடந்த யுத்தங்களில் உயிரிழந்த ரஷ்யப் பிரமுகர்களில் மேஜர் ஜெனரல் மிக மூத்த ஆதிகாரியாவார்.
மேலும் 498 ரஷ்ய வீரர்கள் மோதலில் உயிரிழந்ததாகவும், 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment