(இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கும் ஓமான் நாட்டுக்குமிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ஓமான் நாட்டு சந்தையில் முன்னுரிமை வழங்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஓமான் தூதுகுழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஓமான் நாட்டு தூதுகுழுவினர்களுடன் இன்று (08) வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான வர்த்தக உறவினை பலப்படுத்துவது அவசியமாகும். இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ஓமான் நாட்டு சந்தையில் முன்னுரிமை வழங்குமாறு அமைச்சர் இதன்போது தூதுகுழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.
3000 ஆயிரம் இலங்கையர்கள் ஓமான் நாட்டில் வாழ்கிறார்கள். இலங்கையின் தேசிய உற்பத்திகளை ஓமான் முழுவதும் சந்தைப்படுத்த வேண்டுமாயின் ஓமான் நாட்டில் இலங்கையின் தேசிய உற்பத்திகளை இவ்வருட காலப்பகுதிக்குள் முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும் என ஓமான் நாட்டின் வணிகம் மற்றும் கைத்தொழில் சபையின் தலைவர் ரேடா ஜூமா அல்-சலி குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்குமையிடையிலான வர்த்தக உறவை விரிவுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை திருத்தியமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையில் இலங்கை;கான ஓமான் தூதுவர் அமீர் அஜ்வாத்,ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் செய்க் ஜூமா பின் ஹமதான் அல்-செய்க்,ஓமான் நாட்டின் வணிகம் மற்றும் கைத்தொழில் சபை தலைவர் ரெடா ஜூமா அல் சலி உட்பட வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் கலந்துக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment