இ.போ.ச. டிப்போக்கள் மூலம் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 5, 2022

இ.போ.ச. டிப்போக்கள் மூலம் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகம்

இன்று (05) காலை முதல் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 45 டிப்போக்களில் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக, போக்கு வரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று பிற்பகல் முதல் ஏனைய டிப்போக்களிலும் எரிபொருள் நிரப்புவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியும் என் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய தினம் (05) தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் டிப்போக்கள்

வடக்கு - காரைநகர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி

கிழக்கு - மட்டக்களப்பு, களவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மூதூர்

ஊவா - மொணராகலை, வெல்லவாய

நுவரெலியா - ஹங்குரன்கெத்த

கொழும்பு - ஹோமாகம, மொரட்டுவை, மீதொட்டமுல்ல, தலங்கம, உடஹமுல்ல

கம்பஹா - ஜா-எல, கிரிந்திவெல, கடவத்தை, நிட்டம்புவ

களுத்துறை - அளுத்கம, ஹொரணை, களுத்துறை, மத்துகமை

கண்டி - கண்டி தெற்கு, உடுதும்பறை

உருகுண - அம்பலாங்கொடை, அக்குரஸ்ஸை, எல்பிட்டிய, ஹக்மண, மாத்தறை, உடுகம, கதிர்காமம், தங்காலை

சப்ரகமுவ - தெரணியகல, எம்பிலிபிட்டிய, கொடகவெல, கலவான

வடமேற்கு - குளியாப்பிட்டி, நிக்கவெரட்டிய, கல்கமுவ

வட மத்தி - அநுராதபுரம், தம்புள்ளை, ஹொரவபொத்தானை, கெபித்திகொல்லாவ, பொலன்னறுவை

No comments:

Post a Comment