நாடளாவிய ரீதியில், நாட்டிலுள்ள 17 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (04) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பித்திருந்த குறித்த தொழிற்சங்க போராட்டத்தை 7 நாட்களாக முன்னெடுத்திருந்த நிலையில், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு கைவிட்டிருந்தது.
சுகாதார அமைச்சருடன் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்காத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் நேற்றும் (02) இன்றும் (03) மீண்டும் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (04) முதல் 10 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
அதற்கமைய நாளை (04) முற்பகல் 8.00 மணி முதல் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக, சுகாதார தொழில்துறைகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தில் இணைந்திருந்த அரசாங்க தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவரான சமன் ரத்னப்பிரியவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment