இலங்கையிலுள்ள விலங்கியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணங்கள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

இலங்கையிலுள்ள விலங்கியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கான நுழைவுச் சீட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திறைசேரியினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் பராமரிப்புக்கான செலவு அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, குறித்த கட்டணங்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய உயிரியல் பூங்கா திணைக்கள அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள உயிரியல் பூங்காக்கள் மற்றும் சபாரி பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் 2017 முதல் திருத்தப்படவில்லை என, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய தற்போது திருத்தப்பட்ட நுழைவுக் கட்டணங்கள் வருமாறு

1. தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் அனாதை இல்லம், பின்னவல யானைகள் பூங்கா

உள்நாடு பெரியவர்கள் : ரூ. 200
உள்நாடு சிறுவர்கள் : ரூ. 50

2. ரிதியகம சபாரி பூங்கா
உள்நாடு பெரியவர்கள் : ரூ. 500
உள்நாடு சிறுவர்கள் : ரூ. 150

No comments:

Post a Comment