அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் - இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 2, 2022

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் - இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதன் விளைவாக, விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு மருந்துகளை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளன அதிகாரிகள் அத்தியாவசிய மருந்துகளில் தற்போதைய பற்றாக்குறையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் அத்தியாவசிய மருந்துகள் உட்பட விநியோகங்கள் நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்வது குறித்து பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

விநியோகத்தின் போது ஏற்படும் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலைகள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளால் மருந்துத் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நிர்ணயித்துள்ள உண்மைக்கு மாறான விலைக் கட்டுப்பாடுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தைத் தற்போது தக்கவைக்க முடியவில்லை என்று மருந்துத்துறை குறிப்பிட்டுள்ளது.

அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் 2016 ஒக்டோபர் முதல் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமைக்கு காரணம் வெளிப்படையான மற்றும் செயல்படக்கூடிய முறையான விலை நிர்ணய வழிமுறை இல்லாத காரணத்தினால் ஆகும்.

சந்தையில் கணிசமான காலத்திற்குக் கிடைக்கும் தயாரிப்புகளின் மீள் பதிவு மற்றும் புதிய தயாரிப்புப் பதிவுகளை வழங்குவதில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் தேவையற்ற தாமதம் இருப்பதாக தொழில்துறை மேலும் குறிப்பிட்டது.

ஒழுங்குமுறைக் கட்டணங்கள் சராசரியாக 11 மடங்கு அதிகரித்துள்ளதால், சீரான சேவை எதிர்பார்த்ததை விடக் குறைவாக உள்ளது.

85 மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து செயலில் உள்ள பொருட்கள் மற்றும் உள்ளுர் உற்பத்திக்கான துணைப் பொருட்களுடன் இந்த இறக்குமதிகள் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்காக செலுத்தப்படுகின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தவிர நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. இதன் விளைவாக, விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிறுவப்பட்ட கடனுக்கான கடிதங்களை மதிப்பளிப்பதில் வங்கிகள் சிரமப்படுவதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளன. இதன் விளைவாக, நோயாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அல்லாமல் டொலர்கள் கிடைப்பதற்கு ஏற்ப ஏற்றுமதி திட்டமிடப்பட்டுள்ளது.

மருந்துகளுக்கான இலங்கையின் உடனடித் தேவைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

மேலும் முக்கியமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விலை நிர்ணயம் மற்றும் பதிவுகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு சிவப்பு எல்லையை உடனடியாக அகற்றவது முன்நிபந்தனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment