அரசு உறுதியளித்தபடி இன்று முதல் மின் வெட்டு இல்லை : எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப குறைவான மின் வெட்டுக்கு வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 4, 2022

அரசு உறுதியளித்தபடி இன்று முதல் மின் வெட்டு இல்லை : எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப குறைவான மின் வெட்டுக்கு வாய்ப்பு

இன்று (05) முதல் எரிபொருள் கையிருப்பின் அடிப்படையில் மின் வெட்டு இருக்காது அல்லது குறைவாக இருக்கும் என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (05) முதல் மின் வெட்டை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்திற்காக (05) நேற்று வெளியிடப்பட்ட மின் வெட்டு அட்டவணைக்கு அமைய,

P,Q,R,S,T,U,V,W :

மு.ப. 8.30 முதல் பி.ப. 5.30 மணி வரை 3 மணித்தியாலங்கள்

பி.ப. 6 முதல் இரவு 10 மணி வரை 1 மணித்தியாலம்

E,F :

மு.ப. 8.30 முதல் பி.ப. 4.30 மணி வரை 4 மணித்தியாலங்கள்

பி.ப. 4.30 முதல் இரவு 10.30 மணி வரை 3 மணித்தியாலங்கள்

திட்டமிட்ட மின் வெட்டை அமுல்படுத்துவதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment