டொலரின் பெறுமதியை சுயாதீனமாக தீர்மானிப்பதற்கு இடமளித்தால் அதன் பெறுமதி 240 ரூபாவாக அமையுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, வெளிநாட்டு கடன்களுக்காக செலுத்த வேண்டிய தொகை 1,400 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட்டி வீதமும் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி உண்டியல் மற்றும் பிணைமுறிக்காக செலுத்த வேண்டிய வட்டி வீதமும் மேலும் 400 பில்லியனால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டியதை வலியுறுத்தியுள்ள அவர், சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடமிருந்து பொருளாதார ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கையிருப்பு வீதத்தை சுயாதீனமாக தீர்மானிப்பது, வரிகளை அதிகரிப்பது, ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை இல்லாதொழிப்பது போன்ற நிபந்தனைகளுக்கு உட்படவேண்டி நேரும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment