முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளனர்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவிகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராகவும் இதற்கு முன்னர் பதவி வகித்தார்.
இதற்கு முன்னர் மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் காமினி லொக்குகே புதிய எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேவேளை புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு எரிசக்தி அமைச்சில் இருந்த சில தனிப்பட்ட பொருட்களை மீட்பதற்காக தனது அலுவலகத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் எதிர்காலம் குறித்து நாறைய (இன்று) கூட்டத்தின் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment