(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மங்கள சமரவீர இலங்கையின் அரசியலை புதிய பாதையில் கொண்டு செல்ல காரணமாக இருந்தவர் என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் எப்போதும் சவால்களுக்கு பயந்து செயற்படவில்லை. அவற்றுக்கு முகம்கொடுத்து அவரின் கொள்கையில் உறுதியாக இருந்தார் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி நடைபெற்ற காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மங்கள சமரவீர இந்த நாட்டின் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவர் இல்லாமை இந்நாட்டு அரசியலில் பெரும் குறைபாடாகும்.
1990 ஆம் ஆண்டளவில் இலங்கை அரசியலை புதிய பாதைக்கு கொண்டு சென்ற கதாபாத்திரமாகும். இன, மதவாதியாக அன்றி அவரின் கொள்கையை தொடர்ந்தும் பேணினார். அவர் எப்போதும் சவால்களுக்கு பயந்து செயற்படவில்லை. அவற்றுக்கு முகம்கொடுத்து அவரின் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி தொடர்பில் ஆரம்ப காலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் பின்னர் அதன் பாதிப்புகளை புரிந்துகொண்டு 19 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு பங்களித்தார்.
அரசியலில் புரட்சிகரமான செயற்பாடுகளுடன் விமர்சனங்களுக்கு உள்ளானவராக இருந்தார். அவர் வாழும் காலத்தில் அவர் நாட்டுக்காக செய்தவற்றை நாங்கள் கௌரவப்படுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment