எங்களால் எதையும் தொடங்க முடியாத அளவுக்கு தொற்றுநோய் வெடித்தது, ஆனால் அந்த சவாலை நாங்கள் முறியடித்தோம் - வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

எங்களால் எதையும் தொடங்க முடியாத அளவுக்கு தொற்றுநோய் வெடித்தது, ஆனால் அந்த சவாலை நாங்கள் முறியடித்தோம் - வாசுதேவ நாணயக்கார

கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் வலஸ்முல்ல பிரதேச செயலகம் மற்றும் கட்டுவன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீடுகளுக்கு நீர் விநியோகம் செய்ய முடிந்துள்ளது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை நேற்று (26) திறந்து வைத்து உரையாற்றும் போதே நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் முடங்கியதால் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. இதனை மீளச் செயற்படுத்தி - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தை ஒழுங்குபடுத்தி சுமார் 6000 குடும்பங்களுக்கு நீர் விநியோகம் செய்யும் திறனைப் பெற்றுள்ளோம்.

இதற்கு நமது பிரதமர் வழங்கிய அனுசரணை மற்றும் தலைமைத்துவத்திற்கும், அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் எமது பாவனையாளர்களான மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகிறோம். இன்று முழு உலகமும் தொற்று நோயின் எதிரொலியினால் பணவீக்கம் அல்லது விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடியில் உள்ளது.

நமது பிரதமர் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே நாம் செய்ய வேண்டியிருந்தது. எங்களால் எதையும் தொடங்க முடியாத அளவுக்கு இந்த தொற்றுநோய் வெடித்தது. ஆனால் அந்த சவாலை நாங்கள் முறியடித்தோம்.

இந்த சவாலை முறியடித்த உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை இன்று மிளிர்கிறது. அதற்கு எமக்கு வழங்கப்பட்ட தலைமையே காரணம். அத்துடன் இலங்கை முழுவதும் பரந்துள்ள எமது சுகாதார வலையமைப்பும் காரணம். அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே இத்தகைய சுகாதார வலையமைப்பு உள்ளது.

இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம். இவ்வதறாகவே நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து, மேலும் அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment