கடந்த ஐந்து வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை - சமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

கடந்த ஐந்து வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை - சமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை மீண்டும் நிறைவுசெய்து திறக்க முடிந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை நேற்று (26) திறந்து வைத்து உரையாற்றும் போதே நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் பிரதேசம் ஒருபுறம் வலஸ்முல்ல மறுபுறம் கட்டுவன. இரண்டுக்கும் இடையிலான புறநகர்ப் பகுதியே கிரம. இந்த நகரத்திற்கும் தேவைகள் உள்ளன. ஒருமுறை நாங்கள் ரன்மலேகந்தவிலிருந்து வலஸ்முல்லைக்கு நீர் குழாய் அமைத்தது எனக்கு நினைவிருக்கிறது.

அப்போது வலஸ்முல்ல வைத்தியசாலையில் தண்ணீர் இல்லை. பல்வேறு ஆட்சிக் காலத்தில் கிணறு தோண்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் குறிப்பாக வைத்தியசாலைக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை.

எனவே, வைத்தியசாலைக்கு நீர் வழங்குவதற்காக ரன்மலேகந்தவிலிருந்து நீர் குழாய்களை பதித்து நீர் வழங்க முடிந்தது. இன்று உங்கள் வீடுகளுக்கு இன்னும் அதிகமாக குடிநீரை கேட்கிறார்கள். அதை வழங்குவது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

இடதுசாரி அல்லது முற்போக்குக் கட்சி ஆட்சி செய்யும் போதே உங்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படும். ஐ.தே.க அரசாங்கங்கள் இருந்த போது, உங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு அதிகம் எதுவும் செய்யப்படவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை. இங்குள்ள உங்கள் பிள்ளைகள் எப்பொழுதும் வேலை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அதனை வழங்க வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நாடெங்கிலும் பல நெல் களஞ்சியங்கள் இருந்தபோது, நல்லாட்சி அரசு வந்து நெல்லை சேமித்து வைக்க இடமில்லாமல் விமான நிலையத்தில் நெல்லை சேமித்து வைத்தது. அன்று துறைமுகத்திற்கு கப்பல்கள் வரத் தொடங்கின. எண்ணெய் கொடுக்க ஆரம்பித்தோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை முற்றாக நிறுத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு கிழக்கு முனையப் பணிகளை அந்த அரசாங்கத்தின் அமைச்சர் முற்றாக நிறுத்தினார்.

எனவே, இது போன்று அரசாங்கங்கள் மாறும்போது, மக்கள் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக, உங்கள் நலனுக்காகவும், உங்கள் எதிர்கால குழந்தைகளின் நலனுக்காகவும் செய்யப்படும் அனைத்து பணிகளும் அரசியல் பழிவாங்கலின் விளைவாக நிறுத்தப்பட்டுள்ளன.

அரசியல் பழிவாங்கல்கள் என்ற பெயரில் எங்களை அன்றி உங்களையே பழிவாங்குகின்றனர். இந்த வளங்கள் உங்களுடையவை. இவை உங்களுக்கானவை. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கானவை.

பிரச்சனைகள் உள்ளன. நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாங்கள் தயாராக இல்லை. எனவே உங்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment