ரஷ்யாவில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி பிரான்ஸுக்கு மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 25, 2022

ரஷ்யாவில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி பிரான்ஸுக்கு மாற்றம்

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக ரஷ்யாவில் நடைபெறவிருந்த 2022 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி பாரிஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (UEFA) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

முன்னதாக 2022 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மே மாத இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் ஐரோப்பாவில் பாதுகாப்பு நிலைமையின் தீவிர அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில் நடைபெற்ற UEFA நிர்வாகக் குழுவின் அசாதாரண கூட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை விளையாட்டை ரஷ்யாவிற்கு வெளியே நகர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மே 28 ஆம் திகதி ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த ஆட்டம் அதே தினத்தில் பிரான்ஸில் நடைபெறும்.

No comments:

Post a Comment