வன, வள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக எம்.எம். நசீர் நியமனம் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

வன, வள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக எம்.எம். நசீர் நியமனம் !

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச செயலளாராக மிக நீண்ட காலம் சேவையாற்றிய இலங்கை நிருவாக சேவை முதலாம் நிலை சிரேஷ்ட அதிகாரியான எம்.எம். நசீர் இன்று 2022.02.01 ஆம் திகதி முதல் வனஜீவராசிகள் வனவள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சிறந்த ஆளுமைப் பண்பும் நிறைந்த சேவை மனப்பான்மையும் கொண்டவர் என்பதோடு இந்த நாட்டின் சிரேஷ்ட நிருவாக ஆளுமைகளில் ஒருவருமாவார். 

இறக்காமம், அட்டாளைச்சேனை, கல்முனை ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றி மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய பெரும் மதிப்புக்குறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண நிலமை, ஏனைய அனர்த்தங்களின் போதும் நேரடியாக களத்தில் நின்று மக்களோடு மக்களாக பல்வேறு பணிகளைச் செய்தவர் மட்டுமல்லாது சிறந்த முறையில் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டியாக இருந்து தலைமைத்துவத்தை வழங்கியவருமாவார். 

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயம் செயற்பாட்டாளருமான எஸ்.எம். சபீஸ், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment