உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா போரை தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.
ஆனால் தற்போது உக்ரைனை ஆக்ரோஷமாக தாக்கி வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும் போது, “தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை. தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்து உள்ளது.
இது குறித்து நேட்டோ படையின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோன் பெர்க் கூறியதாவது, “உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நேட்டோ பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.
இதற்கிடையே பிரான்ஸ் தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. நேட்டோ படைக்கு வலுச் சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.
இது குறித்து பிரான்ஸ் இராணுவத் தலைவர் புர்க் ஹார்க் கூறும்போது, “ருமேனியாவில் நேட்டோ படையை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 500 வீரர்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூடிய வாகனங்கள் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து கடந்த 2 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்ததால், மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள், உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்ததுமே ஆயிரக்கணக்கானோர் கார்களில் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் தலைநகர் கீவ்வில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மைய தலைவர் பிலிப்போ கிராண்டி கூறும்போது, “கடந்த 48 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இதில் பெரும்பாலான அகதிகள் போலந்து மற்றும் மால்டோவா நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இன்னும் ஏராளமானோர் எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
மேலும், ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3 குழந்தைகள் உட்பட 198 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 33 குழந்தைகள் உட் பட 1115 பேர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்தார்.
ஆனால் கொல்லப்பட்டவர்களில் ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உள்ளார்களா என்ற தெளிவான விவரம் வெளியிடப்படவில்லை.
உக்ரைனில் நேற்றிரவு குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்ததையடுத்து, இன்று காலையில் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி அவரே எடுத்த காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் பேசியதாவது, நாங்கள் அனைவரும் இங்குதான் (தலைநகர் கீவ்) இருக்கிறோம். ராணுவமும் இங்குதான் இருக்கிறது. குடிமக்களும் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது சுதந்திரம், நாட்டை பாதுகாப்பதற்காக இங்கு இருக்கிறோம். இதே வழியில் தொடர்ந்து இங்கேயே இருப்போம்.
தலைநகர் கீவ்வில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இன்று இரவு ரஷ்ய படைகள் கடும் தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும். நான் முற்றிலும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இந்த இரவு கடினமாக இருக்கும். நமது நாட்டின் பல நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
கீவ் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள். நமது தலைநகரை இழக்கக் கூடாது. உக்ரைனின் தலைவிதி விரைவில் தெரிந்துவிடும்.நாட்டு மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். நமது நாட்டுக்கு அதிக உதவி, அதிக ஆதரவு கேட்டு இருக்கிறோம். இந்த படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதே நமது முக்கிய நோக்கம்.
ராணுவத்தை சரண் அடைய நான் கூறியதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் அவ்வாறு கூறவில்லை. நாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்கள் ஆயுதங்களையும் கீழே போட மாட்டோம். இது எங்கள் நாடு. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம். எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம் என அவர் கூறினார். வீடியோவில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு நின்றபடி அவர் பேசுகிறார்.
இதற்கிடையே அமெரிக்கா அரசு உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிடம் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
போர் இங்குதான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு தேவை வெடி மருந்துகள்தான். சவாரி அல்ல என்று ஜெலன்ஸ்கி கூறியதாக அமெரிக்கா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment