பத்திரிகை வாசிக்க, TV பார்க்க எனக்கு நேரமில்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

பத்திரிகை வாசிக்க, TV பார்க்க எனக்கு நேரமில்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ தனக்கு நேரமில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதானால் வெளியேறலாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

நாமல் ராஜபக்ஷ தமது கட்சியை விமர்சனம் செய்தமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்ட அவர், பத்திரகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ நேரம் இருப்பதில்லை எனவும் தனக்கு கடுமையான வேலைப்பளு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வேலைகளை முடித்துக் கொண்டு வீடு செல்லும் போது 10, 11 மணி ஆகின்றது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இரவு 10 மணிக்கே நித்திரைக்கு சென்று விடுவேன். நாட்டில் அப்போது நடைபெற்ற சில விடயங்களை பத்திரிகை மூலம் அறிந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அசாங்கமொன்றை அமைப்பதற்கான இயலுமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment