முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை அற்றவர் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
பத்தரமுல்ல செத்சிறிபாய வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனை தெரிவித்தார்.
அவர் மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த கொள்கையும் அற்றவர் எனவும் அவரது மகள் எழுதிய "ஜனாதிபதி அப்பா" புத்தகத்தை படித்திருந்தால் அவரைப் பற்றி புரிந்திருக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருக்க விருப்பமானவர்கள் தொடர்ந்து இருக்கலாம். போக வேண்டுமானவர்கள் போக முடியும். அரசாங்கத்திற்குள் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யாமல் ஆளும் தரப்புடன் நேரடியாக கலந்துரையாடல் மூலம் முடிவெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபட வேண்டுமே தவிர, ஆதாரமற்ற விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், அறிக்கைகள் ஆகியவற்றில் நேரத்தை வீணடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்க்கட்சிகள் எந்த கூட்டணிகளை அமைத்தாலும், புத்திஜீவிகள் எதிர்கட்சியில் உள்ளவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளனர், நாட்டு மக்களின் நலனுக்காக அவ்வாறு கூட்டணி அமைத்தால், அது ஆசீர்வதிக்கப்படும்.
அரசாங்கம் செய்வது தவறு எனில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் உரிய குற்றச்சாட்டிற்கு மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment