கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கல் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கெதிராக தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் (Dr. Senal Fernando) டாக்டர் செனல் பெர்னாண்டோ ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சில குழுக்கள் தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதை தாங்கள் தொடர்ந்தும் அவதானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற குழுக்கள் சில பொதுமக்களை கொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. நாட்டில் போதியளவு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பிலுள்ள போதிலும், பொதுமக்களின் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய காரணி வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெறுவதாகுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் (Dr. Senal Fernando) டாக்டர் செனல் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment