இலங்கை அதிபர், ஆசிரியர் சேவைகள் தனியான சேவைகளாக அறிவிப்பு : அதி விசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவைகள் தனியான சேவைகளாக அறிவிப்பு : அதி விசேட வர்த்தமானி வெளியீடு

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியன தனியான சேவைகளாக அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகிய தனித்தனி சேவைகளாக செயற்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு பிரதான விடயதானங்களுக்கமைய வெவ்வேறாக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட மூன்று சேவைகளாக்கும் வகையிலாக 2262 கீழ் 45 என்ற இலக்கத்திலான அதி விசேட வர்த்தமானிவௌியிடப்பட்டுள்ளது.

அமுல்படுத்தல் தினம்

இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை 2021.08.30ஆம் திகதி முதல் வெவ்வேறாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சேவைகளாக்கப்பட்டுள்ளன.

நியமனத்திற்கான அதிகாரமுடையவர்

நியமித்தல், பதவி உயர்வு, ஒழுக்கம், இடமாற்றம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் விவகாரம் தொடர்பிலான அதிகாரம் மற்றும் விடயதானங்கள் அந்தந்த சேவைகளுக்காக தற்போது அதிகாரம் காணப்படும் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பளம்

அந்தந்த சேவைகளுக்கு உரித்தான விசேட சம்பளம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

பதவி, சேவை பிரிவு, தரம், சேவையுடனான ஏனைய தகுதிகள், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு

சேவை பிரிவு, தரம் மற்றும் தகுதி தொடர்பில் உரிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்ட புதிய மானியங்களுக்கமைய சேவை யாப்பினை தயாரித்து வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடும் வரை அந்தந்த சேவைகளுக்காக தற்போது செயற்பாட்டில் உள்ள சேவை யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிதானங்கள் செயற்படுத்தப்படும்.

No comments:

Post a Comment