இலங்கை மத்திய வங்கியினால் வங்கிகளுக்கு டொலர் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு டொலர் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கோதுமை மாவின் விலை வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் பேக்கரி தொழில்களில் ஈடுபட்டு வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதனால் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பும் பேக்கரிகளில் பணிபுரிவோரும் தொழில்வாய்ப்புக்களை இழக்கும் மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் நிர்மாணத்துறைக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிர்மாணத்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment