பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்மொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ள நிலையில் அதன் மீதான இரண்டு நாள் விவாதத்தை ஐ.தேக. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லகஷ்மன் கிரியெல்லவும் சபாநாயகரிடம் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பெற்றுத் தருமாறு சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மேற்படி விடயத்துக்கு மேலதிகமாக முக்கியமாக சில விடயங்கள் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்படவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அது இன்றைய தினத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
அதேவேளை பாராளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் தெரிவுக் குழுக்களின் செயற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதால் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் பாராளுமன்றம் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் முன்னெடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கின்றன.
(லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்)
No comments:
Post a Comment