340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனில் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment