உதய கம்மன்பிலவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

உதய கம்மன்பிலவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டு வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து ரூ. 20 மில்லியனை மோசடியாக பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் உதயகம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டு இடம்பெறும் வழக்கு விசாரணையில் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் உதய கம்மன்பில அவரது தனிப்பட்ட இரு பயணங்கள் மற்றும் இரு உத்தியோகபூர்வ பயணங்கள் தொடர்பில் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்து, அவரது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவரது சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் குறித்த நடவடிக்கையை எடுக்க முன்வந்துள்ளது.

அதற்கயைம, எதிர்வரும் ஜனவரி 23 முதல் ஏப்ரல் 29ஆம் திகதி வரை வௌிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்குவதற்கு உத்தரவிட்ட நீதவான், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment