வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள்

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த வருடத்துக்கான கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு மாநகர சபையில் இன்று (10) இடம்பெற்றது.

இதன்போது 21 நிலையியற் குழுக்களுக்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபையின் 2022ஆம் வருடத்துக்கான முதலாவது அமர்வு இன்று காலை 10,30 மணிக்கு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் கூடியது. ஆரம்ப நடவடிக்கையாக உறுப்பினர்கள் அனைவரும் உறுதிப்பிரமாணம் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரிவு 26(1) இன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 2022 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.

அதன் பிரகாரம் ஆரம்பமாக மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையிலான நிதி குழுவுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதில் எதிர்க்கட்சி உறுப்பினர் பீ.ரோய் நிஷான்த்த 91 வாக்குகளை பெற்று 8ஆவது தடவையாகவும் நிதி குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டார். அவருடன் பிரதி மேயர் எம்.ரி.எம். இக்பால், மொஹமட் ரம்சி, டைடஸ் பெரேரா மற்றும் பீ.விநிஷியா குணரத்ன ஆகியோரும் தெரிவானார்கள்.

அதனைத் தொடர்ந்து தாபன மற்றும் மனித வள அபிவிருத்தி குழு, சட்டம் மற்றும் பொது விடயங்கள் குழு, வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி குழு, மாநக வேலைகள் தொடர்பான குழு, போக்குவரத்து பெருந்தெருக்கள், திட்டமிடல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான குழு திண்மக்கழிவு மற்றும் அபாயக் கழிவு பொருட்கள் முகாமைத்துவ குழு ஆகிய நிலையியற் குழுக்களுக்கு தலா 6உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேபோன்று வளங்கள் முகாமைத்துவம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நலன்புரிகள், சனசமூக அபிவிருத்தி, சுகாதாரம், ஓய்வூதியங்கள், சேவைப்பணிக்கொடை, அனர்த்த முகாமைத்துவம், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம், நூலக விவகாரம் முன்பள்ளி மற்றும் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் வருமானங்கள் சேகரித்தல் ஆகிய 21 நிலையியற் குழுக்களுக்கும் தலா 6 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment