இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட உலகின் நிறை கூடிய கொத்தணி நீலக்கல்லை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்லின் இரசாயனப் பரிசோனை உலகின் பிரபலமான இரசாயன ஆய்வுகூடமான சுவிட்சர்லாந்தில் Gbelin Gem Lab இல் நடைபெற்றது.
ஆய்வுகூடம் இக்கல்லின் தரத்தினை உறுதிப்படுத்தியதையடுத்து 510 கிலோ எடையுள்ள இந்த இரத்தினக் கல்லை இரத்தினக்கல் அதிகார சபை மற்றும் இக்கல்லின் உரிமையாளர்கள் கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(இரத்தினபுரி நிருபர்)
No comments:
Post a Comment